close
Choose your channels
siren
lal_salaam

சிம்புவின் செம டான்ஸ்.. 'நம்ம சத்தம்' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ!

Thursday, February 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’நம்ம சத்தம்’ என்ற பாடல் நாளை வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை சற்று முன் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் சாண்டி மாஸ்டரின் நடன இயக்கத்தில் சிம்பு ஆடும் செம நடனம் உள்ள காட்சி உள்ளது. இதனை பார்த்து சிம்பு ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர் என்பதும், நாளை அதிகாலை 12.06 மணிக்கு வெளியாகும் இந்த பாடலை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை அவரே எழுதி பாடியுள்ளார் என்பதால் இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன், டிஜே அருணாச்சலம், அனு சித்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.