close
Choose your channels
LoveToday
CWK

சிம்புவின் 'பத்து தல' படத்தில் இணைந்த முக்கிய நடிகர்: வைரல் புகைப்படம்!

Sunday, October 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்து வரும் ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ‘பத்து தல’ திரைப்படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர் என்பதும் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகர் கலையரசன் இணைந்துள்ளார். சிம்புவுடன் இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கலையரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதோடு சிம்புவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.