'மாநாடு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் குஷி!
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் மற்றொரு திரைப்படமான ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய அப்டேட்டின்படி ’மாநாடு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் சிம்பு உள்பட முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் இந்த படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரம் வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
’மாநாடு’ படிப்பிடிப்பை படத்தை முடித்துவிட்டு சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கும் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
’மாநாடு’ மற்றும் ’பத்து தல’ ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் என்பதால் சிம்புவின் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு உற்சாகமான ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.