close
Choose your channels

ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் சிம்பு படம்: ரசிகர்கள் மகிழ்ச்சி

Saturday, March 27, 2021 • தமிழ் Comments

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’ஈஸ்வரன்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது என்பதும் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியான மறுநாளில் தான் சிம்புவின் ’ஈஸ்வரன்’ வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடித்த இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைப்பில் உருவான இந்த படத்தை மாதவ் மீடியா கம்பெனி தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz