close
Choose your channels

சிம்புவின் 'ஈஸ்வரன்' சென்சார் தகவல்: ரிலீஸ் எப்போது?

Wednesday, December 30, 2020 • தமிழ் Comments

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் விருந்தாக சிம்புவின் ரசிகர்களுக்காக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘ஈஸ்வரன்’ படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழு ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தை சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் பார்த்ததாகவும் அந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் கொடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து படக்குழுவினர் தரப்பில் இருந்து சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தை பொங்கல் தினத்தில் வரவேற்க சிம்பு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ள கிராமத்து கதையம்சம் கொண்ட படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் ஜனவரி இரண்டாம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே

Get Breaking News Alerts From IndiaGlitz