கண்ணாடி முன் கண்ணாடி அணிந்த சிம்புவின் ஸ்டைல் புகைப்படம் வைரல்!
தமிழ் திரை உலகில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட மாஸ் நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது திரைப்படங்கள் ஒரு சில ஆண்டுகள் அதிகம் வெளியாகாமல் இருந்தாலும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறையாமல் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மீண்டும் பிசியாகி ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு மேல் நடித்து கொண்டிருக்கும் சிம்பு சமூக வலைதளங்களிலும் கடந்த சில மாதங்களாக ஆக்டிவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் கண்ணாடி அணிந்து கண்ணாடி முன் நிற்கும் ஸ்டைலான புகைப்படம் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ‘எல்லாமே கருப்பு வெள்ளை அல்ல’ (Not everything is Black & White) என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் சிம்பு இதனையடுத்து ‘பத்து தல’ மற்றும் ‘நதியினிலே நீராடும் சூரியன்’ ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளார்.