close
Choose your channels
Por
Joshwa

'தீ தளபதி' பாடலில் நடிக்க சிம்பு வாங்கிய சம்பளம் எவ்வளவு? ஆச்சரிய தகவல்

Thursday, December 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் சிம்பு ’தீ தளபதி என்ற பாடலை பாடியுள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் அவர் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பாடலை பாடுவதற்கு நடிப்பதற்கும் அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், தில் ராஜூ தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சிதமே’ என்ற பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் சமீபத்தில் ’தீ தளபதி என்ற பாடல் வெளியானது. தளபதி விஜய்க்காக சிம்பு பாடிய இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் சிம்பு ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக அவர் விஜய்யுடன் நடித்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தீ தளபதி பாடலை பாடுவதற்கும், சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கும் நடிகர் சிம்பு சம்பளம் எதையும் வாங்கவில்லை என்றும் தயாரிப்பாளர் வற்புறுத்தியும் அவர் ஒரு பைசா கூட இந்த படத்திற்காக சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சிம்புவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.