close
Choose your channels
siren
lal_salaam

சிம்புவின் 'பத்து தல' ரிலீஸ் தேதி இதுவா?

Saturday, December 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சிம்பு நடித்த ’மாநாடு’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் ‘பத்து தல’ படமும் வெற்றியை சிம்பு பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.