close
Choose your channels
sisa

சிம்புவின் 'மாநாடு' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Monday, September 27, 2021 • தமிழ் Comments

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ‘மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அறிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் இந்தப் படத்தின் டிரைலரை எதிர்பார்த்து பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ‘மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீசாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz