close
Choose your channels

'வலிமை' நாயகியிடம் அப்டேட் கேட்ட தமிழ் ஹீரோ!

Wednesday, March 31, 2021 • தமிழ் Comments

தல அஜித் நடித்துள்ள ’வலிமை’ படத்தின் நாயகி ஹூமாகுரேஷியிடம் ’வலிமை’ அப்டேட்டை தமிழ் ஹீரோ ஒருவர் கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை அவரது ரசிகர்கள் முதல்வர் முதல் பிரதமர் வரை கேட்டு வந்தனர் என்பதும் ஒரு வழியாக தயாரிப்பாளர் போனிகபூர் சமீபத்தில் மே ஒன்றாம் தேதி அஜித்தின் 50வது பிறந்த நாளில் ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அப்டேட் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மே 1ஆம் தேதிக்கு பிறகு ’வலிமை’ படத்தின் மேலும் சில அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இளம் ஹீரோக்களில் ஒருவரான சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்தார். இந்த பதிவுக்கு ’வலிமை’ ஹூமா குரேஷி ஒரு கமெண்ட்டை பதிவு செய்த நிலையில் சித்தார்த் அவரிடம் ‘மேடம் வலிமை அப்டேட்’ என்று கேட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

’வலிமை’ படத்தில் அஜித் ஜோடியாக நடித்துள்ள ஹூமா குரேஷி ஏற்கனவே ’காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz