close
Choose your channels
NMM

இந்த கோயில்ல சயின்ஸ்க்கும் மீறின சக்தி இருக்கு: 'மாயோன்' டிரைலர்

Sunday, June 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிபிராஜ் நடித்த ‘மாயோன்’ திரைப்படம் குறித்த பரபரப்பான செய்திகள் கடந்த சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், சற்று முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இரண்டு நிமிடத்திற்கும் அதிகமாக ஓடும் இந்த டிரைலரில் பல திகில் மற்றும் மர்மமான காட்சிகள் உள்ளன என்பதும் மாயோன் மலை என்ற இடத்தில் இருக்கும் பள்ளிகொண்ட கிருஷ்ணர் கோவிலில் உள்ள மர்மங்கள் குறித்து இந்த படத்தின் கதை அம்சம் உள்ளது என்பதும் டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

சயின்ஸ்க்கு மீறிய சக்தி இருக்கிறது என்றும் கடவுள் சக்தியை உணர வேண்டும் அதை ஆராய்ச்சி செய்யக் கூடாது போன்ற வசனங்கள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

மொத்தத்தில் இந்த படம் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு புதுமையான கதை அம்சத்துடன் அதே நேரத்தில் 5000 வருடத்துக்கு முந்தைய ஒரு கோவிலில் இருக்கும் மர்மத்தையும் இந்தப் படம் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிகுமார், பகவதி பெருமாள் உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை கிஷோர் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையில், ராம்பிரசாத் ஒளிப்பதிவில், ராம் பாண்டியன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.