close
Choose your channels
marketraja
enpt
Bigil

பிரபல நடிகரின் மகன் வாங்கிய இரண்டு தங்க மெடல்கள்

Monday, November 11, 2019 • தமிழ் Comments

கோலிவுட் நடிகர்கள் ஒருபக்கம் நடிப்பில் சாதனை செய்து வரும் நிலையில் அவர்களது வாரிசுகள் பல்வேறு துறைகளில் சாதனை செய்து பதக்கங்கள் குவித்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக தளபதி விஜய்யின் மகள் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை என்பதும் அவரது அணி சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. அதேபோல் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார் என்பதும், மேலும் தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு மூன்று தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிபிராஜ் மகனும் விளையாட்டுத்துறையில் சாதனை செய்து தங்க மெடல்களை பெற்றுள்ளார். சிபிராஜ் மகன் தீரன், புனேவில் தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ என்ற தற்காப்புக்கலை போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்க மெடல்களை பெற்றுள்ளதாகவும், இந்த சந்தோஷத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்றும் சிபிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிபிராஜ் மகன் தீரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சிபிராஜ் தற்போது ’ரங்கா’, ‘மாயோன்’ மற்றும் ‘வால்டர்’ ஆகிய படங்களில் நடித்து திரையுலகில் பிசியாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz