சேர்ந்து வாழ்வதைவிட பிரிந்து வாழ்வதில் சந்தோஷம்: அப்பா-அம்மா விவாகரத்து குறித்து ஸ்ருதிஹாசன்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தன்னுடைய அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து வாழும் போதுதான் சந்தோசமாக இருந்தார்கள் என நடிகை சுருதிஹாசன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை சரிகா ஆகிய இருவரும் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஸ்ருதிஹாசன், அக்ஷர ஹாசன் என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் 16 ஆண்டுகள் கழித்து 2004ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது பெற்றோர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டது தனக்கு மகிழ்ச்சி என்றும் இருவரும் இணைந்து வாழ முடியாத நிலையில் ஏதோ ஒரு காரணத்திற்காக சேர்ந்து வாழ்வது தேவையற்றது என்றும் எனவே இருவரும் சரியான முடிவை எடுத்து தற்போது தனித்தனியாக சந்தோசமாக வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது கிடைத்த சந்தோசமான வாழ்க்கையை விட பிரிந்து வாழும்போது சந்தோசமாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அவர்களுடைய சந்தோசத்தை பார்த்துதான் உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் பெற்றோர்களாக இருவரும் தொடர்ந்து எங்கள் மீது அன்பு செலுத்தி வருகிறார்கள் என்றும் குறிப்பாக தந்தை தனக்கு மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இருவருமே தனித்தனியாக மிகவும் அற்புதமானவர்கள் என்றும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.