close
Choose your channels
Por
Joshwa

3 வயதிலேயே அம்மாவுக்கு உதவி செய்யும் ஸ்ரேயா மகள்.. க்யூட் புகைப்படங்கள்..!

Sunday, December 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ரேயா சரணின் மூன்று வயது மகள் அவருடைய போட்டோஷூட்டுக்கு உதவி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கோச்சீவ் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களாக தனது மகளின் க்யூட் புகைப்படங்களை ஸ்ரேயா சரண் பதிவு செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த புகைப்படம் இணையத்தை கவர்ந்துள்ளது.

ஸ்ரேயா சரணின் போட்டோஷூட்டுக்கு அவரது மூன்று வயது மகள் கண்ணாடியை பிடித்துக் கொண்டு உதவி செய்யும் காட்சி உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

நடிகை ஸ்ரேயா சரண் தற்போது எந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் சமீபத்தில் நடித்த ’கப்ஜா’ என்ற கன்னட படம், ‘மியூசிக் ஸ்கூல்’ என்ற ஹிந்தி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.