close
Choose your channels

ஒரு தலை ஃபேன் இன்னொரு தலை ஃபேனுக்கு ஹெல்ப் பண்ணக்கூடாதா? 'ஷாட் பூட் த்ரீ' டிரைலர்..!

Thursday, September 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ஷாட் பூட் த்ரீ’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் குறும்பான சேட்டைகளுடன் ஆரம்பிக்கும் இந்த படம் ஒரு கட்டத்தில் பள்ளி மாணவன் வளர்க்கும் நாய் காணாமல் போகிறது. அதை அந்த மாணவர்கள் தேடும் போது கிடைக்கும் திடுக்கிடும் தகவல்கள் தான் இந்த படத்தின் கதை என்பது தெரிய வருகிறது.

இதில் நடித்த ஒரு மாணவனின் பெற்றோர்களாக வெங்கட் பிரபு, சினேகா நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, ஷிவாங்கி, பூவையார் உள்பட பலர் நடித்துள்ளனர். அதேபோல் கைலாஷ், ப்ரநிதி, வேதாந்த் உட்பட சில குழந்தை நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கத்தில், ராஜேஷ் வைத்யா இசையில், சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், பரத் விக்ரமன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் ஜாலியாக இருப்பதை அடுத்து நிச்சயம் இந்த படம் திரையரங்குகளில் வெளியானால் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos