close
Choose your channels

நயன்தாரா பாடலுக்கு கடலில் இறங்கி ஸ்டைலான ஸ்டெப் போடும் ஷிவானி: வைரல் வீடியோ

Sunday, March 28, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்திருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சீயான் விக்ரம் உடன் இணைந்து நடித்த ’இருமுகன்’ படத்தில் இடம்பெற்ற ’ஹெலனா’ என்ற பாடலுக்கு ஷிவானி கடற்கரையிலும் கடலில் இறங்கியும் ஸ்டைலான ஸ்டெப் போடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை ஷிவானி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் ’தலைவி’ ’பேபி’ ’ஷிவு’ ’பியூட்டிஃபுல்’ ‘க்யூட்’ ’சிங்கப்பெண்ணே’ போன்ற கமெண்ட்ஸ்கள் அதிகம் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz