close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

ஷிவானியை அழகாக மாற்றிய ரம்யா பாண்டியன்: இவருக்கு இவ்வளவு திறமையா?

Monday, April 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகை ஷிவானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் அவருடைய இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த புகைப்படத்தின் விசேஷம் என்னவென்றால் அவருடன் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த ரம்யா பாண்டியன் தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களுடைய கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அழகுக்கு அழகு சேர்க்கும் புகைப்படத்தை எடுத்த ரம்யா பாண்டியனின் போட்டோகிராபி திறமைக்கு வாழ்த்துக்கள் எனவும், ரம்யா பாண்டியனுக்கு இவ்வளவு போட்டோகிராபி திறமையா? என்றும் நெட்டிசன்கள் புகழாராம் சூட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஷிவானி, ரம்யா பாண்டியன் இருவரும் ஒரு டாஸ்க்கில் சிங்கப்பெண் என்ற பெயரைப் பெற்றார்கள் என்பதும், ஷிவானியின் அம்மா வீட்டிற்கு வந்து அவரை திட்டியபோது ரம்யா பாண்டியன் ஒருவர்தான் ஷிவானிக்கு ஆதரவாக இருந்து ஆறுதல் கூறினார் என்பதும், இதனை அடுத்து இருவரும் நெருக்கமானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.