close
Choose your channels

'தளபதி 65' படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

Wednesday, May 5, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் வெளிநாட்டு மால் ஒன்றின் செட் போடப்பட்டு வருவதாகவும் இதில் தான் ’தளபதி 65’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 65’ திரைப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய வேடத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகர் ஒருவரும் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஷைன் டாம் சாக்கோ என்பவர் தான் அந்த மலையாள நடிகர் என்பதும் இவர் நடிகர் மட்டுமின்றி உதவி இயக்குனராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தமிழில் ஹரி இயக்கிய ‘வேங்கை’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz