close
Choose your channels
IKK
Jail

பிரபல நடிகையின் கணவரிடம் ரூ.9 கோடி மதிப்புள்ள ஆபாச வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்

Tuesday, September 21, 2021 • தமிழ் Comments

பிரபல நடிகையின் கணவரிடம் ரூபாய் 9 கோடி மதிப்புள்ள ஆபாச வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்த ’குஷி’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் நடிகை ஷில்பா ஷெட்டி. மேலும் இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தயாரித்து அதை வெளிநாட்டு விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பதும், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காவல் துறையினர் நடத்திய கூடுதல் விசாரணையில் ராஜ்குந்த்ராவிடம் மேலும் பல கோடி மதிப்புள்ள ஆபாச வீடியோக்கள் இருக்கலாம் என்று தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ராஜ்குந்த்ரா தயாரித்த 119 ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த வீடியோக்களை அவர் ரூ.9 கோடிக்கு விற்க திட்டமிட்டு இருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz