close
Choose your channels
aranmanai

ஜெய்ப்பூரில் நடிகர் ஷர்வானந்த் திருமணம்.. க்யூட் புகைப்படங்கள்..!

Sunday, June 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’எங்கேயும் எப்போதும்’ ’ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த நடிகர் ஷர்வானந்த்துக்கு திருமணம் நடந்த நிலையில் அது குறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ஷர்வானந்த், ரக்ஷிதா திருமணம் ஜெய்பூரில் உள்ள லீலா பேலஸில் பிரமாண்டமாக நடந்தது. கடந்த ஜூன் 2ஆம் தேதி மெஹந்தி உள்பட திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் நடந்த நிலையில் இன்று ஷர்வானந்த் - ரக்ஷிதா திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு ராம்சரண் தேஜா, சித்தார்த், அதிதிராவ் ஹைத்ரி, இயக்குனர் வம்சி, விக்ரம், ஆஷிஷ், ஹர்ஷித், ஹன்ஷிதா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஷர்வானந்த்-ரக்ஷிதா திருமண வரவேற்பு ஜூன் 9ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷர்வானந்த்துக்கு திருமணம் ஆனதை அடுத்து அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment