close
Choose your channels
DJ

ஷங்கரின் 'வேள்பாரி' படத்தில் இந்த பிரபல நடிகரா? அப்ப சூர்யா என்ன ஆச்சு?

Monday, November 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘வேள்பாரி’ என்ற நாவலை திரைப்படமாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

மேலும் ‘வேள்பாரி’ திரைப்படத்தில் சூர்யா மற்றும் யாஷ் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கயிருக்கும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான ‘வேள்பாரி’ திரைப்படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

மூன்று பாகங்களாக இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய இந்த நாவலின் ‘வேள்பாரி’ கேரக்டருக்கு ரன்வீர்சிங் பொருத்தமாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.