close
Choose your channels
Don

மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் அதிதிஷங்கர்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Sunday, January 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர், சமீபத்தில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான ’விருமன்’ என்ற படத்தில் நடித்து முடித்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/

’விருமன்’ படத்தில் நடித்து முடிக்கும் முன்னரே அதிதிஷங்கருக்கு சிம்பு உடன் ’கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தில் அவர் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் அதிதிஷங்கர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார் என்பதும் குறிப்பாக சமீபத்தில்தான் டாக்டர் பட்டம் பெற்றபோது எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டது பெரும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ரசிகர்களை மயக்கும் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அவர் முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். மேலும் விரைவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அதிதிஷங்கர் வருவார் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.