close
Choose your channels
iruttu
Capmaari

கோட்டையை எட்டி பார்க்கும் கமல்ஹாசன்: ஷங்கரின் வித்தியாசமான வாழ்த்து!

Thursday, November 7, 2019 • தமிழ் Comments

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளையும் சினிமாவில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையும் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 3’ படத்தை இயக்கி வரும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசனுக்கு தனது டுவிட்டரில் ’இந்தியன் 2’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள கோட்டை ஒன்றில் இந்தியன் தாத்தா கமல்ஹாசன் நின்றபடி உள்ள ஒரு புகைப்படத்தை  பகிர்ந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது 

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது குவாலியரில் இந்த படத்தின் பிரமாண்டமான சண்டைக் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெயின் நவீன தொழில்நுட்பத்துடன் இந்த சண்டைக் காட்சியை அமைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்த பின்னர் குவாலியரில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz