close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

ஷங்கர்-ராம்சரண் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: காரணம் இந்த பெண் தான்!

Thursday, July 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகிவரும் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பெண் அதிகாரியால் நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் படம் ’ஆர்சி 15’ . இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் மேலும் முக்கிய வேடத்தில் அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த், நாசர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.170 கோடி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த பகுதிக்கு வந்த நகராட்சி பெண் அதிகாரி ஒருவர் பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தடை விதித்தார். பள்ளி நடந்துகொண்டிருக்கும்போது படப்பிடிப்பு நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்றும், எனவே பள்ளியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்ததை அடுத்து படக்குழுவினர் தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி உள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.