close
Choose your channels
PKK

22 ஆண்டுகளுக்கு முன் வெளியான கமல் படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற ஷாருக்கான்!

Thursday, January 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

22 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடித்த திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசன் நடித்து இயக்கிய திரைப்படம் ’ஹேராம்’. இந்த படம் கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி, நஸ்ருதீன் ஷா, ஹேமாமாலினி, ஓம்புரி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் நடித்து இருந்தார் என்பதும் அவர் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’ஹேராம்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை 22 ஆண்டுகள் கழித்து ஷாருக்கான் பெற்றிருப்பதாகவும் கமல்ஹாசன் கேரக்டரில் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் ஷாருக்கான் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.