close
Choose your channels

நடிகை சமந்தாவுடன் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல பாலிவுட் நடிகர்!

Tuesday, September 28, 2021 • தமிழ் Comments


தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா. இவர் “தி பேமிலி மேன் சீஸன் 2’‘ வெப் தொடரில் நடித்தன் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடையே அறியப்படும் ஒரு நடிகையாக மாறிவிட்டார். இந்நிலையில் இந்தியில் முன்னணி நடிகராக இருந்துவரும் ஷாகித் கபூர் நடிகை சமந்தாவுடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை சமந்தா திருமணத்திற்குப் பிறகும் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். சினிமாவைத் தவிர டிவி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று அவருக்கான வரவேற்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் உருவாகிவரும் “சாகுந்தலம்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதைத்தவிர தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்“ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து நடிப்புக்கு சிறிது ஓய்வுக்கொடுக்கப் போவதாகக் கூறிய நடிகை சமந்தா நெட்ஃபிளிக்ஸ் சார்பாக உருவாக்கப்படும் புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படியிருக்கும்போது “தி பேமிலி மேன் சீஸன் 2” வெப் தொடரை இயக்கிய ராஜ்& டிகே இயக்கிவரும் புதிய வெப் தொடரில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்துவரும் ஷாகித் கபூர் நடித்து வருகிறார். அவரிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்வியின்போது ஃபேமிலி மேன் வெப் தொடரில் நடிகை சமந்தாவை முழுமையாக ரசித்ததாகவும் அவருடன் படம் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார். ஷாகித் கபூர் தெரிவித்த இந்தக் கருத்து தற்போது சோஷியல் மீடியாக்களில் கவனம் பெற்றுவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz