close
Choose your channels
Viruman
Laal

ஹீரோயின் அவதாரத்திற்கு ரெடியான நடிகர் ஷாருக்கின் மகள் சுஹானா… வைரல் பிக்!

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானின் மூத்த மகளான சுஹானா கான் ஏற்கனவே சோஷியல் மீடியா பிரபலமாகத் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் பதிவிட்டு இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் எப்போது ஹீரோயின் அவதாரம் எனக்கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளான ஷாருக்கான் மற்றும் கௌரி கானுக்கு ஆர்யன் கான், சுஹானா கான், அப்ராம் கான் என்று 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் சுஹானா கான் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் படித்துவிட்டு லண்டன் Ardingly கல்லூரியில் பட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து நியூயார்க்கில் சினிமா சம்பந்தமான பயிற்சி படிப்பை முடித்து சமீபத்தில் மும்பை திரும்பியுள்ளார்.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அண்ணன் ஆர்யன் கானுடன், சுஹானா கானும் வருகை தந்திருந்தார். இதனால் சோஷியல் மீடியாவில் இவர்களைப் பற்றிய செய்திகள் வைரலாகின. இந்நிலையில் சுஹானா கான் பேஷன் டிசைனர் மணீஷ் மல்கோத்ரா வடிவமைத்த சிவப்பு நிற சேலையை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் சுஹானா கானின் தோற்றம் ஹீரோயினைப் போன்றே இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் எப்போது சினிமாவில் நடிப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பி அவருக்கு பாராட்டு தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.