close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

'தளபதி 66' படத்தில் நடிப்பது உண்மையா? இன்ஸ்டாகிராமில் ஷாம் தகவல்

Tuesday, April 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக ’12பி’ நடிகர் ஷாம் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வைரலானது. இந்த நிலையில் நடிகர் ஷாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ’தளபதி 66’ திரைப்படத்தில் ஷாம் நடிப்பதாக வெளியிட்ட போஸ்டரை பகிர்ந்து, தளபதி விஜய்யுடன் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதிலிருந்து ’தளபதி 66’ படத்தில் ஷாம் நடிக்க உள்ளார் என்று தெரிய வைக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ஏற்கனவே இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடிக்க இருக்கிறார் என்பதும், இந்த படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கின்றார் என்பதும் தெரிந்ததே. தமன் இசை அமைக்கும் இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார் என்பதும், இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.