close
Choose your channels

நினைத்து கூட பார்க்க முடியாத அதிசயம்: ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சீரியல் நடிகை!

Tuesday, May 4, 2021 • தமிழ் Comments

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களுடன் சீரியல் நடிகை ஒருவர் பணிபுரிந்தது நினைத்து பார்க்க கூட முடியாத அதிசயம் என கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

’சுந்தரி’ என்னும் சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா என்பது அனைவரும் அறிந்ததே. அவரது நடிப்பிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் பாடல் ஒன்றில் சீரியல் நடிகை சுந்தரி மற்றும் சூப்பர் சிங்கர் பூவையார் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

’மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலில் தனக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததாகவும் ரஹ்மான் அவர்களுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது தனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் நினைத்து கூட பார்க்க முடியாத வாய்ப்பு என்றும் சுந்தரி தனது இன்ஸ்டாகிராமில் சுந்தரி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஏஆர் ரஹ்மான் அவர்களும் தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு உள்ளார் என்பதும் சுந்தரி மற்றும் பூவையாருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Get Breaking News Alerts From IndiaGlitz