close
Choose your channels
anabel
friendship

மகளுடன் செம ஆட்டம் போடும் சீரியல் நடிகை! வைரல் வீடியோ

Saturday, July 24, 2021 • தமிழ் Comments

ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ என்ற சீரியலில் மாமியார் கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை கவிதா. இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பதும் இவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு இளமையாக தோன்றும் இவர் எப்படி மாமியார் வேடத்தில் நடிக்க சம்மதித்தார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன் டிவியில் ஒளிபரப்பான ’ஆனந்தம்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான கவிதாவுக்கு ஹோம்லியான முகம் என்பதால் சின்னத்திரையில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டரில் ஒன்றி, தனது நடிப்பை வெளிப்படுத்தி வருவார் என்பதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவிதா தனது மகளுடன் செம ஆட்டம் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ’இதில் மகள் யார் அம்மா யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். மேலும் மகளுடன் சரிக்கு சமமாக போட்டி போட்டுக்கொண்டு செம ஆட்டம் போட்ட கவிதாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz