இருமுறை கலைந்த கரு.. 42 வயதில் இரட்டை குழந்தை பெற்ற சீரியல் நடிகை.. நெகிழ்ச்சியான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல சீரியல் நடிகை 10 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் அவருக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை அடுத்து சின்னத்திரை உலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான ’சத்யா’ சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஜூலி. இவரது உண்மையான பெயர் விசாலாட்சி என்றாலும் ஜூலி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். நடிகை மட்டுமின்றி இவர் ஒரு நல்ல டான்ஸர் என்பதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
’சத்யா’, ‘சித்திரம் பேசுதடி’ உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்த நிலையில் திருமணம் ஆகி 10 வருடங்களாக இவருக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. ஏற்கனவே இரண்டு முறை கருத்தரித்து அந்த கருக்கள் கலைந்துவிட்டதாக பேட்டி ஒன்றில் கண்ணீருடன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் கர்ப்பமான நிலையில் தான் கர்ப்பமானதை அவர் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார் . வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த பிறகு தான் அவர் கர்ப்பமானது பலருக்கு தெரியவந்தது.
இந்த நிலையில் ஜூலி தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் ஆண் குழந்தை ஒன்று பெண் குழந்தை என்றும் என்று தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு சின்னத்திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments