close
Choose your channels
cred

பிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங்: 'பகல் நிலவு' அஸீமின் அந்த டார்லிங் யார் தெரியுமா?

Tuesday, March 2, 2021 • தமிழ் Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பகல் நிலவு’ மற்றும் ’கடைக்குட்டி சிங்கம்’ போன்ற சீரியலில் நடித்த நடிகர் அஸிம் தனது டார்லிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறிய இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் அஸிம் மற்றும் பிக்பாஸ் புகழ் ஷிவானி இணைந்து நடித்த இந்த தொடர் மூன்று வருடங்கள் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனது மனைவியை கருத்துவேறுபாடு காரணமாக அஸிம் சமீபத்தில் விவாகரத்து செய்தார் என்பதும் ஷிவானியுடன் உள்ள காதல் காரணமாகத்தான் அவர் மனைவியை விவாகரத்து செய்ததாக வதந்தி கிளம்பியது என்பதும் இதற்கு அஸீம் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஸிம் தனது 25 வயது சகோதரருக்கு தனது பிறந்தநாளை தெரிவித்துள்ளார். 25வது பிறந்த நாளை கொண்டாடும் எனது டார்லிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz