close
Choose your channels
NMM
NMM

செப்.30 'பொன்னியின் செல்வன்' ரிலீஸ் நாள் மட்டுமல்ல.. த்ரிஷாவுக்கு மேலும் ஒரு மறக்க முடியாத நாள்!

Friday, September 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களும் இன்றைய நாளை தங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாத நாள் என்று பல பேட்டிகளில் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் அபாரமாக நடித்து த்ரிஷாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவித்து வரும் நிலையில் ’பொன்னியின் செல்வன்’ ரிலீஸான இன்றைய செப்டம்பர் 30 என்பது அவருக்கு ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது

அதுமட்டுமின்றி இதே செப்டம்பர் 30, 1999ஆம் ஆண்டில்தான் அவர் மிஸ் சென்னை பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே செப்டம்பர் 30ல் த்ரிஷாவின் வாழ்வில் இரண்டு முக்கிய நாளாக அமைந்திருப்பது அபூர்வமான ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.