close
Choose your channels
Rajavamsam

செந்தில் கணேஷ் -ராஜலட்சுமியின் க்யூட் குழந்தைகள்: வைரல் புகைப்படங்கள்!

Monday, June 28, 2021 • தமிழ் Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செந்தில்கணேஷ் மற்றும் ராஜலட்சுமிக்கு அறிமுகம் தேவையில்லை என்பது தெரிந்ததே. கிராமிய பாடகர்களான இருவரும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல மேடைகளில் பாடி புகழ் பெற்று உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி மகன் கவின் ராஜாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையடுத்து செந்தில் கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ‘நாங்கள் பெற்ற செல்வங்களே, இதே ஆனந்தத்தோடு ஆரோக்கியத்தோடும் ஆண்டுகள் பல நூறு காண அப்பா அம்மாவின் அன்பு வாழ்த்துக்கள்’ என்று செந்தில் கணேஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதிகளின் க்யூட் குழந்தைகள் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செந்தில் கணேஷின் தங்கை திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், சிலம்பாட்டம், தாரைதப்பட்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன என்பதும், இதுகுறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz