close
Choose your channels
cred

உண்மையிலேயே நீங்க மிகப்பெரிய டைரக்டர்: 'விருமாண்டி'க்கு சல்யூட் அடித்த பிக்பாஸ் நடிகர்!

Friday, October 9, 2020 • தமிழ் Comments

சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ’க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்த நிலையில் நடிகரும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சென்றாயன் இந்த படம் குறித்து தனது கருத்தை வீடியோ ஒன்றில் நடித்தார். அதில் அவர் கூறியதாவது

சமீபத்தில் ’க/பெ ரணசிங்கம்’ படம் பார்த்தேன். ரொம்ப அழகான ஒரு படம், ஒரு புதுமையான கதை, புதுமையான திரைக்கதை. அதாவது ஒருசில படங்களில் வெளிநாட்டுக்கு எப்படி போவார்கள் என்பதை காட்டுவார்கள். சில படங்களில் வெளிநாட்டில் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை காட்டுவார்கள். ஆனால் இந்த படத்தில் வெளிநாட்டுக்கு போய் ஒருவர் இறந்துவிட்டால் அந்த பாடியை இந்தியாவில் இருக்கிற தமிழ்நாட்டுக்கு எப்படி கொண்டு வருவது என்பதை மிக அழகாக காட்டி உள்ளனர்

தயவு செய்து இந்த படத்தை யாரும் மிஸ் செய்ய வேண்டாம். உண்மையிலேயே சூப்பராக பண்ணியிருக்கிறார்கள். விரைவில் இந்த படம் தியேட்டரில் வரப்போகிறது என்று சொல்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையிலேயே விருமாண்டி அவர்கள் மிகப் பெரிய டைரக்டர். உங்களுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் என்று சென்றாயன் சல்யூட் அடித்தார்.

மேலும் நான் பார்த்த படத்திலேயே இது ஒரு புதுமையான படமாக உள்ளது என்றும், இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் வேற லெவலில் நடித்து இருக்கின்றார் என்றும், இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் அவர்களுடைய பணியை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர் என்றும், இந்த படம் மிகப்பெரிய மிகவும் சிறப்பான படம் என்பதால் அனைவரும் பாருங்கள் என்று சென்றாயன் அந்த வீடியோவில் மேலும் கூறியுள்ளார்
 

Get Breaking News Alerts From IndiaGlitz