close
Choose your channels
Rocketry
Yaanai

'செம்பருத்தி' வனஜாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஹீரோ போல் இருக்காரே?

Sunday, January 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீ டிவியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவும் ஒளிபரப்பி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றது என்பதும் இந்த சீரியலில் உள்ள முக்கிய கேரக்டர்களில் நடித்த கார்த்தி உள்பட ஒருசிலர் மாறினாலும் இந்த சீரியலுக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘செம்பருத்தி’ சீரியலில் வில்லி வனஜா என்ற கேரக்டரில் நடித்திருப்பவர் லட்சுமி என்பதும் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமூக வலைகளில் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி சமீபத்தில் தனது மகனின் பிறந்தநாளை அடுத்து மகனுடன் கோயிலுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களில் வனஜாவை விட வளர்ந்திருக்கும் அவரது மகனை பார்த்து ’உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சரியமடைந்து கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் லட்சுமி வில்லி கேரக்டரில் நடித்து வந்தாலும் அவரது மகன் ஹீரோ போல் இருக்கிறார் என்றும் விரைவில் அவரை ஹீரோவாக பார்க்க ஆசைப்படுகிறோம் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

தனது மகனின் பிறந்தநாளையொட்டி லட்சுமி நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்லக்குட்டி மோஹி. உனக்கு தாயாகவே நான் பிறந்தேன்.... வாழ்க்கை இத்தனை அழகென்பதை நீ பிறந்தபோது உன் கண்களில் கண்டேன். வாழ்க்கை எத்தனை அர்த்தம் நிறைந்தது என்பதை உன்னோடு வளர்கையில் உணர்ந்தேன்.... நன்றிடா என் மகனே ... என் தாயுமானவன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.