உயிரோட இருக்கணும் குமாரு.. அது மட்டும்தான் மேட்டரு: செல்வராகவனின் 'கொரோனா' பதிவு


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரனோ வைரஸ் பாதிப்பில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார அமைச்சகம் வரை பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்த மாஸ்க் குறித்து பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வருவதோடு மீம்ஸ்களும் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பிரபல இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கிய ’புதுப்பேட்டை’ திரைப்படத்தில் தனுஷ் மாஸ்க் அணிந்துள்ளது போல ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் ’இப்ப எல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு.. அது மட்டும் தான் மேட்டரு... என்று குறிப்பிட்டுள்ளார் இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் மாஸ்க் குறித்து செல்வராகவன் பதிவு செய்த இந்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு..அது மட்டும்தான் மேட்டரு !! #coronavirus#wearmask#SocialDistancing pic.twitter.com/2FwRx891Xx
— selvaraghavan (@selvaraghavan) August 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.