close
Choose your channels

சகோதரிகள், சகோதரருடன் புத்தாண்டு கொண்டாடும் செல்வராகவன்: வைரல் புகைப்படம்

Saturday, January 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் தனது சகோதரிகள் மற்றும் சகோதரருடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் செல்வராகவனுக்கு தனுஷ் என்ற சகோதரரும் விமலா கீதா மற்றும் கார்த்திகா தேவி ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இந்த நிலையில் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது சகோதரிகள் விமலா கீதா மற்றும் கார்த்திகா தேவி மற்றும் சகோதரர் தனுஷ் ஆகியோர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் சில நிமிடங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரிராஜாவின் நான்கு வாரிசுகளான செல்வராகவன், தனுஷ், டாக்டர் விமலாகீதா கீதா மற்றும் கார்த்திகா தேவி ஆகியோர் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ மற்றும் ’சாணிக்காகிதம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் செல்வராகவன், தனுஷ் நடிக்க இருக்கும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.