close
Choose your channels
RaRa

யுடியூபில் புதிய சாதனையை படைத்த விஜயின் ஹிட் பாடல்.....!

Saturday, July 31, 2021 • தமிழ் Comments

நடிகர் விஜயின் ’செல்ஃபி புள்ள’ பாடல் யுடியூபில் புதிய சாதனையை படைத்துள்ளது.

கடந்த 2014-இல் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கத்தி. இத்திரைப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும், ‘செல்ஃபி புள்ள’ பாடல் தான் நாடு முழுவதும் வைரலானது. இப்பாடலை மதன் கார்க்கி எழுதியிருப்பார், சுனிதி செளகான் குரல் எல்லோராலும் ஈர்க்கப்பட்டது. செல்ஃபி என்பது இப்பாடலுக்கு பின்தான் பரவலாக பேசப்பட்டது.

நடிகர் விஜயின் வாத்தி கம்மிங், ஆளப்போறான் தமிழன், வாத்தி கம்மிங் பாடல் வரிகள் வீடியோ, வெறித்தனம், உன்னாலே என் ஜீவன் வாழுதே, ஈனா மீனா டீகா போன்ற பாடல் வீடியோக்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அந்தவகையில் தற்போது 7-ஆவது பாடலாக செல்ஃபி புள்ள’ பாடலும் சேர்ந்துள்ளது. இப்பாடல் யுடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதால், விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz