close
Choose your channels

மிரட்டல் விவகாரம், நடந்தது என்ன? சீனுராமசாமி பேட்டி

Wednesday, October 28, 2020 • தமிழ் Comments

தனது உயிருக்கு ஆபத்து என்றும் தனக்கு முதல்வர் ஐயா உதவ வேண்டும் என்றும் சற்று முன்னர் இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து சற்று முன்னர் இயக்குனர் சீனுராமசாமி செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ‘விஜய் சேதுபதிக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை என ஒரு சிலர் சித்தரித்து உள்ளனர் என்றும் நள்ளிரவிலும் எனது செல்போனுக்கு மிரட்டல் அழைப்புகள் மற்றும் ஆபாசமாக அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் விஜய் சேதுபதி நலன் கருதியே ’800’ படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் விஜய் சேதுபதி தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்திதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாக ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றும் சீனுராமசாமி விளக்கமளித்துள்ளார். சீனுராமசாமியின் இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz