close
Choose your channels

தன்னை வெறுக்கும் கூட்டத்திற்கு சீமான் நேரடி பதில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Friday, April 2, 2021 • தமிழ் Comments

தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தொடர்ந்து தமிழக அரசியலில் செயல்பட்டு வரும் சீமானின் நிலைப்பாடு எப்போதும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் சீமான் எப்படிப் பட்டவராக செயல்பட்டு வருகிறார்? அவரை ஒருசிலர் தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு என்ன காரணம் என்ற கேள்விகளும் இருக்கத்தான் செய்கின்றன.

இந்நிலையில் தன்னைத் தொடர்ந்து தாக்கும் சில விமர்சனங்களுக்கு நேடியாக விளக்கம் அளித்து பதில் கூறி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள். அதோடு இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன? முன்பு இருந்த தேர்தலில் செயல்பட்டத்தை விட தற்போது வீரியத்துடன் செயல்படுவதற்கு என்ன காரணம்? 5 முனைப் போட்டி நிலவும் தற்போதைய தேர்தலில் தனக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்து பிரத்யேக நேர்காணல் வழங்கி உள்ளார் சீமான்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது. அதேபோல தமிழக அரசியலில் பெரும் தலைவர்களுடன் களம் கண்ட இவர் முதல் முறையாக இளம் தலைமுறை அரசியல்வாதிகளுடன் களம் காணுகிறார். அவர்களைக் குறித்த சில விமர்சனங்களையும் தனது நேர்காணலில் தெரிவித்து இருக்கிறார். மேலும் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இருந்து வந்த அரசியல் பாணி குறித்தும் தான் அதில் இருந்து எவ்வாறு விலகி நிற்கிறேன் என்பதைக் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் அளித்துள்ள நேர்காணல் வீடியோ கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz