close
Choose your channels

சீமான் அவர்களின் தந்தை காலமானார்....! பாரதிராஜா இரங்கல்...!

Thursday, May 13, 2021 • தமிழ் Comments

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கட்சித்தலைவருமான சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் இன்று  காலமானார்.

சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள தனது வீட்டில், உடல்நிலைக்குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.இத்தகவலை நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

"நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள்


மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!"
என பதிவிட்டுள்ளனர்.

செந்தமிழன் அவர்களின் இறப்பிற்கு அரசியல் பிரமுகர்கள், கட்சித்தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குனர் பாரதிராஜா டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,
"என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தை திரு.செந்தமிழன் அவர்களின் மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தை திரு.செந்தமிழன் அவர்களின் மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.@SeemanOfficial@NaamTamilarOrg

பாரதிராஜா.

— Bharathiraja (@offBharathiraja) May 13, 2021

முக்கிய அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!

இடம்: அரணையூர்

— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) May 13, 2021

Get Breaking News Alerts From IndiaGlitz