close
Choose your channels
sisa

டான்ஸ் மாஸ்டருடன் சாயிஷா ஆடிய செம டான்ஸ்: வைரல் வீடியோ

Friday, April 9, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா, டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் நெருக்கமாக ஸ்டெப்ஸ்களுடன் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருடன் சாயிஷா நடித்த ’யுவரத்னா’ என்ற படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படம் இன்று முதல் அமேசான் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’நீதானே நா’ என்ற பாடலின் படப்பிடிப்பின்போது டான்ஸ் மாஸ்டருடன் சாயிஷா ஆடிய ரிகர்சல் வீடியோவின் காட்சிகளை தற்போது சாயிஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் டான்ஸ் மாஸ்டருடன் அவர் நெருக்கமான ஸ்டெப்ஸ்களுடன் ஆடும் காட்சியை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்

இன்ஸ்டாகிராமில் சாயிஷாவுக்கு இரண்டு மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz