close
Choose your channels

என் தோல்வியை நான் ஒத்துக்கிறேன்: சதீஷுக்கு ரிப்ளை செய்த ப்ரியா பவானி சங்கர்

Tuesday, April 13, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் நோக்கி சென்று கொண்டு இருப்பவர் பிரியா பவானி சங்கர் என்பதும் அவர் தற்போது கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சிம்புவின் ’பத்து தல’ அருண் விஜய்யின் அடுத்த படம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் கோல்டன் நிற சேலை அணிந்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். இந்த பதிவில் ’நான் என்ன யோசிக்கிறேன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்? என்று கேப்ஷனாக பதிவு செய்து இருந்த நிலையில் இந்த போட்டோவை கலாய்க்கும் வகையில் கமெண்ட் செய்த நடிகர் சதீஷ் ’சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே என்று யோசித்து இருப்பீர்கள்’ என்று கூறினார். மேலும் இந்த பதிவுடன் அவர் லேடி கெட்டப் உடன் கூடிய புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார்

இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த ப்ரியா பவானி சங்கர் ’அப்படி சொல்லாதீங்க கோபால்’ என கிண்டலாக பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் அதற்கு பதில் கூறிய சதீஷ் ’சோடி போட்டுக்கலாமா சோடி, ரெண்டு போட்டோக்களையும் சோடி போட்டுக்கலாமா? என்று கலாய்க்க அதற்கு ப்ரியா பவானி சங்கர் ’என் தோல்வியை நான் ஒத்துக் கொள்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார்

ப்ரியா பவானி சங்கர் மற்றும் சதீஷ் ஆகியோர்களின் இந்த டுவிட்டுகளை பார்த்து ரசிகர்கள் இருவரையும் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,

Get Breaking News Alerts From IndiaGlitz