close
Choose your channels
Por
Joshwa

பிக்பாஸ் நிகழ்ச்சியால் தினேஷுக்கு ஏற்பட்ட இழப்பு.. இனி அவருக்கு பதில் இவர்..!

Sunday, December 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த தினேஷ், தான் நடித்து வந்த முக்கிய தொடரை இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அதன் பிறகு தினேஷ் ,அர்ச்சனா, கானா பாலா, அன்னபாரதி மற்றும் பிராவோ ஆகிய 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக வந்தனர். ஆனால் தினேஷ், அர்ச்சனா தவிர மீதமுள்ள மூவரும் வெளியேறி விட்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தினேஷ் பிக்பாஸ் வீட்டில் அபாரமாக விளையாடி வரும் நிலையில் அவர் நடித்து வந்த ’கிழக்கு வாசல்’ என்ற சீரியல் அவர் கையை விட்டு சென்றுவிட்டது. இந்த சீரியலில் அவர் அர்ஜுன் என்ற கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

’கிழக்கு வாசல்’ சீரியலில் தினேஷ் நடித்த அர்ஜுன் கேரக்டரில் சசிந்தர் என்பவர் நடிக்க உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தினேஷ் சென்ற போது அவருடைய கேரக்டர் வெளிநாடு செல்வதாக காட்டப்பட்டது. ஆனால் தினேஷ் தொடர்ச்சியாக பிக் பாஸில் நன்றாக விளையாடிக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு அவர் வெளியே வர வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. எனவே அவருக்கு பதிலாக ’கிழக்கு வாசல்’ சீரியலில் அர்ஜுன் கேரக்டரில் நடிக்க சசிந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார். இனி அவரே இந்த கேரக்டரில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராதிகா தயாரித்து வரும் இந்த சீரியலில் எஸ்ஏ சந்திரசேகர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.