சசிகுமாரின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. 5 மொழிகளில் விரைவில் ரிலீஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சசிகுமார் நடித்த அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’அயோத்தி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சசிகுமார் தற்போது ’பகைவனுக்கு அருள்வாய்’ ’நாநா’ மற்றும் ’நந்தன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் ஜிவி பிரகாஷ் அல்லது. சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ’ஃப்ரீடம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
சத்திய சிவா இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தாலே இது ஒரு சுதந்திர போராட்ட கதையம்சம் கொண்டது போல் தெரிகிறது.
Happy to reveal the First Look of @SasikumarDir #Freedom !
— G.V.Prakash Kumar (@gvprakash) February 8, 2024
Wishing the team @jose_lijomol @Sathyasivadir @vijayganapathys @PandiyanParasu for a great success...@GhibranVaibodha #Udhayakumar #NBSrikanth @teamaimpr @TheBrandMax pic.twitter.com/fFLNoP1dI8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments