close
Choose your channels

சசிகுமாரின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்: தியேட்டரில் ரிலீஸா?

Thursday, October 29, 2020 • தமிழ் Comments

பிரபல நடிகர் இயக்குனர் சசிகுமார் நடிப்பில் உருவான ’நாடோடிகள் 2’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் ஐந்து படங்களில் நடித்து வருகிறார். ’கொம்பு வச்ச சிங்கம்டா’ ’ராஜவம்சம்’ ’நாநா’ ’பரமகுரு’ மற்றும் ’எம்ஜிஆர் மகன்’ ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது சசிகுமார் நடித்த இன்னொரு திரைப்படமான ’ராஜவம்சம்’ திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் சென்சாருக்கு சென்று, ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது. சென்சாருக்கு சென்று சான்றிதழ் பெற்று உள்ளதால் இந்த படம் திரை அரங்குகள் திறந்த உடன் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இயக்குனர் சுந்தர் சி உதவியாளர் கதிர்வேலு இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக முதல்முறையாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகிபாபு, மனோபாலா, தம்பிராமையா, ராதாரவி, ரேகா, சுமித்ரா, நிரோஷா உள்பட 49 பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சசிகுமாரின் 19வது படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். டிடி ராஜா தயாரிக்கும் இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காமெடி நிறைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz