close
Choose your channels
Viruman
Laal

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்!

Monday, October 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தீபாவளி அன்று ஏற்கனவே ரஜினி, சூர்யா, சிம்பு மற்றும் விஷால் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் மேலும் ஒரு பிரபல நடிகரின் படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ சிம்பு நடித்த ’மாநாடு’ மற்றும் விஷால் ஆர்யா நடித்த ’எனிமி’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.அதுமட்டுமின்றி அமேசான் ஓடிடியில் சூர்யாவின் ’ஜெய்பீம்’ படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நான்கு பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாவதால் தீபாவளிக்கு சினிமா ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தீபாவளி அன்று மேலும் ஒரு பிரபல நடிகரின் திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகுமார் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவான ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் தீபாவளி அன்று ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கிரீன்சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக மிருணாளினி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் பாடகர் அந்தோணிதாசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் சசிகுமாரின் மற்றொரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.