close
Choose your channels
Viruman
Laal

திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் சசிகுமாரின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் நடித்த ’உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பதும் அவர் நடித்த அடுத்த படமான ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படமும் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சசிகுமாரின் திரைப்படம் ஒன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதன் ரிலீஸ் தேதியும் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சசிகுமார் நடிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று ’கொம்பு வச்ச சிங்கம்டா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருந்த நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக படக்குழுவினர் காத்திருந்தனர்

இந்நிலையில் இந்த படம் நவம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 27ஆம் தேதி சிம்புவின் ’மாநாடு’ வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு ஒரு நாள் முன்பே சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டியன், சூரி, மகேந்திரன் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.