close
Choose your channels
anabel
friendship

நான் வேம்புலியாக மாற இந்த பெண் தான் காரணம்: 'சார்பாட்டா பரம்பரை' ஜான் கொக்கன் டுவிட்!

Sunday, July 25, 2021 • தமிழ் Comments

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் என்பதும் சமூக வலைதள விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தில் ஆர்யா மட்டுமின்றி படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர் கூட மனதில் பதியும் அளவிற்கு அந்த கேரக்டராகவே மாறி நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தில் ‘வேம்புலி’ என்ற கேரக்டரில் நடித்த ஜான் கொக்கனின் நடிப்பு அனைவரின் மனதையும் கவர்ந்தது என்று கூறலாம்.

இந்த நிலையில் தான் ‘வேம்புலி’ கேரக்டரில் ஒன்றிப்போய் நடித்ததற்கு ஒரு பெண் தான் காரணம் என்று கூறி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தின் உதவி இயக்குனரான ஜென்னி என்பவர் தான் தன்னை வேம்புலி கேரக்டராகவே மாற்றியவர் என்றும், அவர் தான் தனக்கு வசனங்களைச் சொல்லி கொடுத்ததாகவும் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின்போது எனக்குள் இருந்த வேம்புலி கேரக்டரை கொண்டுவந்தது அவர்தான் என்றும் அவருக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் உதவி இயக்குனர் ஜென்னியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz